Jul 24, 2025 - 10:45 AM -
0
யாழ். தாவடி பகுதியில் உள்ள மதுபானசாலை முன்பாக நேற்று (23) இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமுற்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
நேற்று மாலை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில், சுதுமலை பகுதியை சேர்ந்த நேசராஜன் சர்வேந்திரன் (வயது 51) என்பவரே படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படாதபோதும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--