Jul 24, 2025 - 12:08 PM -
0
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆடி அமாவாசை சிறப்பாக இடம்பெறும் ஓர் ஆலயமாக புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் கெருடமடு பிள்ளையார் ஆலயம் திகழ்கிறது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் கெருடமடு பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் இன்று அதிகாலை தீர்த்தமாடி சிறப்பாக இடம்பெற்றது.
வழமைபோன்று நேற்று (23) பகல் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிசேகம் இடம்பெற்று பூசைகளை தொடர்ந்து எம்பெருமான் உள்வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
தெடர்ந்து நேற்று மாலை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்த பூலோக நாயகி சமேத வேகாவனேஸ்வரப்பெருமான் எழுந்தருளி கெருடமடு பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்ததும் இரவு விசேட பூசை வழிபாடுகள் பூலோக நாயகி சமேத வேகாவனேஸ்வரப்பெருமான் மற்றும் விநாயகப்பெருமான் எழுந்தருளி உள்வீதி வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து வளர்ந்து நேர்ந்து பொங்கல் இடம்பெற்று இன்று காலை பிதிர்க்கடன்கள் செய்யப்பட்டு ஆறு மணிக்கு தீர்த்தமாடி அதனை தொடர்ந்து சிறப்பு பூசைகள் இடம்பெற்றது
இதன்போது பெருமளவான பக்தர்கள் தூக்குக் காவடி, தீக்காவடி, பால் செம்பு காவடிகள் என நேர்த்திக் கடன்களை செய்ததோடு ஆடி அமாவாசை உற்சவத்தில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
--