Jul 24, 2025 - 12:31 PM -
0
முறையாக குளிரூட்டப்படாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை (sausages) மட்டக்களப்பு நகரில் நேற்று (23) மாலை சுகாதார அதிகாரிகள் கைப்பற்றியுள்ளத்துடன் அவற்றை எடுத்து வர பயன்படுத்திய வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு, வேதாரணியம் வீதியில் வைத்து குறித்த வாகனத்தை மடக்கிப்பிடித்த சுகாதார பரிசோதகர்கள் அதிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை கைப்பற்றியுள்ளனர்.
முறையாக குளிரூட்டப்படாமையினால் குறித்த இறைச்சி உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி உள்ளதாகவும் மனித பாவனைக்கு உதவாதது எனவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இன்று மன்றில் ஆஜராக்கப்பட்டபோது தலா 10,000 ரூபா வீதம் 20,000 ரூபா அபராதமாக விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
--