கிழக்கு
மட்டக்களப்பில் இடம்பெற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

Jul 24, 2025 - 02:59 PM -

0

மட்டக்களப்பில் இடம்பெற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

இன்று அதிகாலை 03 மணியளவில் மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதான வீதியோரத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

மட்டக்களப்பு நகரில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்ற மோட்டார் வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து - வீதியோரத்தில் இருந்த கொங்கிரிட் தூணில் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இளைஞன் சமபவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்று தனது நண்பனை வீட்டில் விட்டுவிட்டு, மீண்டு ஏறாவூர் சென்ற வேளையே விபத்து இடம்பெற்றுள்ளது.

 

சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05