இந்தியா
தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமிக்கு தண்டனை அறிவிப்பு

Jul 24, 2025 - 07:01 PM -

0

தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமிக்கு தண்டனை அறிவிப்பு

திருமண பந்தத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவிட்டுள்ளார். 

திருமண பந்தத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமியை தூக்கிலிட முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2018-ல் தனது 2 குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து அபிராமி கொன்றது தமிழ்நாட்டையே உலுக்கியது. அபிராமிக்கும் அதே பகுதியில் பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டிருந்தது. 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது குழந்தைகள் அஜய் (6), கார்னிகா (4) ஆகியோரை கொன்ற வழக்கில் அபிராமி, காதலன் மீனாட்சிசுந்தரம் கைதாகினர். 

இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் இன்று (24) காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

திருமணத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமியும், காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05