Jul 25, 2025 - 12:37 PM -
0
‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ (Avatar: Fire and Ash), ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அவதார்’ திரைப்படத் தொடரின் மூன்றாவது பாகமாகும்.
இப்படத்தின் முதல் ட்ரெய்லர் ஜூலை 25 ஆம் திகதி ‘The Fantastic Four: First Steps’ திரைப்படத்துடன் திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், ட்ரெய்லர் அதிகாரப்பூர்வமாக ஒன்லைனில் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. எனினும் நேற்று (24) கசிந்த ட்ரெய்லர் ஆன்லைனில் பரவியதாகவும், ஸ்டுடியோ அதை விரைவாக அகற்ற முயற்சித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கசிந்த ட்ரெய்லர் குறைந்த தரத்தில் உள்ளது மற்றும் பாண்டோராவின் புதிய காட்சிகள், விண்ட் ட்ரேடர்ஸ் மற்றும் ஆஷ் மக்கள் (Ash People) போன்ற புதிய நாவி குழுக்கள், ஜேக் சுல்லி (சாம் வொர்திங்டன்), நெய்திரி (ஸோ சல்டானா), மற்றும் புதிய வில்லனான வராங் (ஊனா சாப்ளின்) ஆகியவற்றை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.