Jul 25, 2025 - 01:55 PM -
0
பிரபல யூடியூபர் இலக்கியா அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதாக அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் இலக்கியா.
இவர் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறி பூந்தமல்லியில் உள்ள அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய பரிசோதனையில், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளமையும், அதிக அளவில் மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
எனவே கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முடிவு செய்த நிலையில், உடன் இருந்த நபர் போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.
போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் யூடியூபர் இலக்கியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.