Header Logo

பல்சுவை
ஓடும் காரின் மேல் ஏறி நடனமாடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Jul 25, 2025 - 03:27 PM -

0

ஓடும் காரின் மேல் ஏறி நடனமாடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

நவி மும்பையில் ஓடும் சொகுசு காரின் முன் பகுதியில் மீது ஏறி இளம் பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நஸ்மீன் சுல்தே என்ற அந்த பெண் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். இவரை யூ-டியூபில் 10 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 8.5 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். 

இந்நிலையில் நஸ்மீன் சுல்தே நவி மும்பையில் காரில் சென்ற போது முன் பகுதியில் ஏறி பிரபல இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடி உள்ளார். 

காரை அவரது காதலன் ஷேக் ஓட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர். 

சில பயனர்கள், இந்த வீடியோ சமீபத்தில் படகில் நடனமாடி வைரலான இந்தோனேஷியாவை சேர்ந்த 11 வயது சிறுவனின் நடனம் போல் இருப்பதாக பதிவிட்டனர். 

அதே நேரம் ஏராளமான பயனர்கள், சமூக வலைதள புகழுக்காக இதுபோன்று விபரீத சாகசங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதிவிட்டனர். 

இதனைத் தொடர்ந்து நஸ்மீன் சுல்தே மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!