செய்திகள்
ஜோ ரூட் சாதனை

Jul 25, 2025 - 07:51 PM -

0

ஜோ ரூட் சாதனை

இங்கிலாந்தின் ஜோ ரூட், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் ஜூலை 23 அன்று ஆரம்பமானது.

 

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 

 

பென் ஸ்டோக்ஸ்  அபாரமாகப் பந்து வீசி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷப் பண்ட் (54) ஆகியோர் அரைசதம் கடந்தனர்.

 

பின்னர், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது. தொடக்க வீரர்களான ஜாக் கிராவ்லி (84), பென் டக்கட் (94), ஆலி போப் (71) ஆகியோர் அரைசதங்களைப் பதிவு செய்தனர். 

 

ஜோ ரூட் நூறு ஓட்டங்களைக் கடந்து சதமடித்தார். இது இந்தியாவுக்கு எதிராக அவரது 12ஆவது டெஸ்ட் சதமாகும். மேலும் இந்தத் தொடரில் அவரது இரண்டாவது சதம்.ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 சதங்களுடன், குமார் சங்கக்காரவுடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துள்ளார். 

 

சச்சின் டெண்டுல்கர் (51 சதங்கள்) முதலிடத்திலும், ஜாக் கல்லீஸ் (45 சதங்கள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 

 

மேலும், இந்த இன்னிங்ஸில் 120 ஓட்டங்களை எடுத்தபோது, ரிக்கி பொண்டிங்கின் (13,378 ஓட்டங்கள்) டெஸ்ட் ஓட்ட சாதனையை முறியடித்து, ஜோ ரூட் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 

 

சச்சின் டெண்டுல்கர் 15,921 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05