சினிமா
செயற்கை அழகை தேடி சென்ற நடிகைக்கு நேர்ந்த சோகம் - ஆபத்தில் முடிந்த அழகு சிகிச்சை

Jul 26, 2025 - 03:44 PM -

0

செயற்கை அழகை தேடி சென்ற நடிகைக்கு நேர்ந்த சோகம் - ஆபத்தில் முடிந்த அழகு சிகிச்சை

வாழைப்பழத்தோல், பீசா, கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர்தான் உர்பி ஜாவத். 

சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர வைத்தது. உதடுகள் வீங்கி கண்ணம் பெரிதாகி வித்தியாசமாக காணப்பட்டார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

போட்டோஷூட்டில் துவங்கி பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் வித்தியாசமான ஆடைகளை அணிந்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் உர்பி ஜாவத். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 

இந்நிலையில், உதட்டில் ஊசி போட்டு லிப் பில்லரை நீக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்திருக்கிறார் ஊர்பி ஜாவத். 

மாடலிங் துறையில் கலக்க வேண்டும் என்பதற்காகவும், பாலிவுட்டில் பிரபல நடிகையாக வேண்டும் என்பதற்காகவும் வீட்டை விட்டு மும்பை வந்த இவர் தனது 18 வயதிலேயே லிப் பில்லரை போட்டுக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். 

ஆனால், அது சரியாக இல்லை என்று 9 வருடங்கள் கழித்து அதனை நீக்க முடிவு செய்த உர்பி ஜாவத், உதட்டில் ஊசி போட்டு சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். உதடுகள் வீங்கி கன்னம் பெரிதாக உக்கிரமாக காணப்பட்டார். இது வைரலானது. 

பலரும் இதனை விமர்சித்தனர்.2 நாட்கள் கழித்து லிப் பில்லரை நீக்கும்போது இப்படி பக்க விளைவு ஏற்படும் என்று தெரிவித்தார். 

சிறு வயதில் தெரியாமல் செயற்கை அழகை தேடி சென்று தனது உதட்டை கெடுத்துக்கொண்டதாவும், இயற்கை அழகுடன் வாழ நல்ல மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு லிப் பில்லரை நீக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், லிப்பில்லருக்கு தான் எதிரி இல்லை என்றும் நல்ல மருத்துவரிடம் சிகிச்சை செய்யவில்லை என்றால் அதிகமான பின் விளைவுகளை சந்திக்க கூடும் என்றும் உர்பி தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை ரைசா வில்சனுக்கும் இப்படி உதடு வீங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05