Jul 27, 2025 - 06:30 PM -
0
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இல்லாது மணல் ஏற்றி பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களும், அதன் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லாறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் கிளிநொச்சி நோக்கி கொண்டு செல்லப்பட்ட பெறுமதிமிக்க தேக்கு மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சூட்சுமமான முறையில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கனரக வாகனத்தை தர்மபுரம் நோக்கி செலுத்துச் சென்ற நிலையில், தர்மபுரம் பொலிஸார் தமக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
அதன் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மரக் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திஸ்சாநாயக்க தெரிவித்துள்ளார்.
--