வடக்கு
மறைந்த மாவை சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு

Jul 27, 2025 - 06:38 PM -

0

மறைந்த மாவை சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு

மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனேதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வானது இன்றையதினம் சங்கானை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. 

தந்தை செல்வா நற்பணி மன்றமும் வட்டுக்கோட்டை பகுதி மக்களும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 

நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி செலுத்தப்பட்டது. பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரைகள் ஆற்றப்பட்டன. பின்னர் குடும்பத்தினருக்கான நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மறைந்த மாவை சோ.சேனாதிராஜாவின் புதல்வன் மா.கலையமுதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா குகதாஸ், கஜதீபன், யாழ். மாநகர சபையின் உறுப்பினர் தர்ஷானந், தந்தை செல்வாவின் பேரன் இளங்கோவன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.நாகரஞ்சினி, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சர்வேஸ்வரன், இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், தந்தை செல்வா நற்பணி மன்றத்தினர், போராளிகள் நலன்புரி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05