Jul 27, 2025 - 10:33 PM -
0
எவர்கிரீன் காம்போவான தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகி உள்ள இட்லிக்கடை படத்தின் என்ன சுகம் பாடல் வெளியானது.
‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தனுஷ். அடுத்து தனது 50ஆவது படமாக ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி நடித்தார்.
தொடர்ந்து தனது சகோதரி மகன் பவிஷை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கினார். இயக்குனராக கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது தனது 52ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கிறார்.
இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கிறது.
இப்படத்துக்கு ‘இட்லி கடை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்றது. இதில், திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து 2 ஆவது முறையாக தனுஷ்-நித்யா மேனன் ஜோடி சேர்ந்துள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர்.