Jul 28, 2025 - 03:07 PM -
0
சிறுவர்களின் நல்வாழ்வு மற்றும் கல்விக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதுடன் தேசத்தை போஷித்தல் என்ற அதன் வர்த்தக நாம வாக்குறுதியை வலுப்படுத்தும் விதமாக செரண்டிப் நிறுவனம், ஹோமாகமவில் உள்ள WP/HO/கொடகம மகா வித்தியாலயத்திற்கு மாதாந்தம் 300kg அதி சக்தி மாவை நன்கொடையாக வழங்க உறுதிபூண்டுள்ளது. இவ் அதி சக்தி மாவானது நுண்ணூட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட கோதுமை மா என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நடவடிக்கை ஆனது தினசரி ஊட்டச்சத்துக்கள் மூலம் சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான செரண்டிப் நிறுவனத்தின் சமூகம் சார்ந்த தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்வில் கொடகம மகா வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.
மாணவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் அளிக்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த நன்கொடைக்கு அவர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
சிறுவர்களில் ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள், இலங்கையின் இளைய தலைமுறையினரின் நீண்டகால ஆரோக்கியத்தை தொடர்ந்து பாதித்து வருவதாக ‘இலங்கையில் தேசிய ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பு: 2022’ இல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
செரண்டிப் நிறுவனம் ஊட்டச்சத்து இடைவெளிகளைக் குறைக்கும் தீர்வுகளை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான செறிவூட்டப்பட்ட அதி சக்தி கோதுமை மா, வளரும் சிறுவர்களின் அறிவாற்றல் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்ட மூன்று அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து (Iron), போலிக் அமிலம் (Folic Acid) மற்றும் விட்டமின் B12 (Vitamin B12) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பரவலாக உட்கொள்ளப்படும் அடிப்படை உணவில் ஊட்டச்சத்து மேம்பாட்டை ஒருங்கிணைத்து ஒரு முக்கிய ஊட்டச்சத்து சவாலுக்கு செரண்டிப் நிறுவனம் ஒரு நிலையான மற்றும் நடைமுறை தீர்வை வழங்குகிறது. இந்த முயற்சி, நீண்டகால சமூக சுகாதாரம் மற்றும் மேம்பாட்டை பேணுவதற்கான நிறுவனத்தின் பரந்த இலக்கையும் எடுத்துக்காட்டுகிறது. இந் நன்கொடை மூலம் செரண்டிப் நிறுவனம் சிறுவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், பாடசாலை செயல்திறன் மற்றும் வருகையை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. இதனால் மாணவர்கள் வகுப்பறை மற்றும் இணை பாடத்திட்டங்களில் சிறப்பாக செயற்பட தயாராக இருப்பதை உறுதி செய்கிறது.

