வணிகம்
SLIBFI விருதுகள் 2025 இல் NDB வங்கி எட்டு மதிப்புமிக்க வெற்றிகளுடன் கௌரவிக்கப்பட்டது

Jul 28, 2025 - 04:11 PM -

0

SLIBFI விருதுகள் 2025 இல் NDB வங்கி எட்டு மதிப்புமிக்க வெற்றிகளுடன் கௌரவிக்கப்பட்டது

NDB வங்கியானது அண்மையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் துறை (SLIBFI) விருதுகளில் எட்டு சிறப்புமிக்க விருதுகளைப் பெற்றதன் மூலம் இலங்கையின் இஸ்லாமிய வங்கித் துறையில் தனது தலைமைத்துவத்தை பெருமையுடன் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த விருதுகள் NDB இன் தொடர்ச்சியான சிறந்து விளங்குதல், புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கிய நிதி சேவைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கின்றன. 

NDB வங்கியானது 2025 ஆம் ஆண்டு விருதுகளின் பதிப்பில் நிறுவன மற்றும் தனிப்பட்ட பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்டமையானது வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாமிய நிதி நிலப்பரப்பில் வங்கியின் இணைந்த மற்றும் தனிப்பட்ட சாதனைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த விருதுகளில் நான்கு தங்க விருதுகள் மற்றும் நான்கு வெண்கல மற்றும் தகுதி காண் விருதுகள் அடங்கும், இது வங்கி மற்றும் அதன் குழுவின் பரந்த அளவிலான சாதனைகளை வெளிப்படுத்துகிறது. 

NDB வங்கியானது நிறுவனம் மற்றும் இதர பிரிவில், ஆண்டின் இஸ்லாமிய நிதி ஒப்பந்தத்திற்கான தங்க விருதைப் பெற்றது, இது வங்கியின் மூலோபாய நிபுணத்துவம் மற்றும் பெறுமதி மற்றும் தாக்கத்தை வழங்கும் புதுமையான, ஷரியா-இணக்கமான நிதி தீர்வுகளை கட்டமைக்கும் திறனுக்கான சான்றாகும். NDB வங்கியானது இந்த வெற்றியை நிறைவு செய்யும் விதமாக, , ஆண்டின் இஸ்லாமிய நிதி சாளரம்/அலகுக்கான வெண்கலத்தையும், ஆண்டின் இஸ்லாமிய நிதி ஒப்பந்தத்திற்கான தகுதி காண் விருதையும் பெற்றது, இது அதன் இஸ்லாமிய வங்கிப் பிரிவான NDB ஷரீக்கின் நிலையான வலிமை மற்றும் செயற்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. 

NDBவங்கியானது வங்கியின் ஆழமான திறமையை பிரதிபலிக்கும் வகையில், தனிநபர் பிரிவிலும் தொடர்ச்சியான சிறந்த கௌரவங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது. NDB இன் இஸ்லாமிய வங்கித் தலைவரான பஹார்நயன், NDB இன் இஸ்லாமிய வங்கி பயணத்தை வடிவமைப்பதில் அவரது தொலைநோக்குத் பங்களித்த ஒவ்வொரு குழு உறுப்பினரையும் வாழ்த்துகிறது. மேலும் NDB வங்கியானது நெறிமுறை சார்ந்த நிதி, வாடிக்கையளர்களை வலுப்படுத்தல் மற்றும் உருமாறும் தலைமைத்துவத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம், இலங்கையின் உள்ளடக்கிய பொருளாதார செழுமையை நோக்கிய பயணத்தை ஆதரிக்கும் அதன் நோக்கத்தில் உறுதியாக உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05