Jul 28, 2025 - 04:16 PM -
0
TRI-ZEN செயற்திட்டத்தின் கீழ் வீட்டு உரிமையாளர்களிடம் 700 அடுக்குமனைகள் வெற்றிகரமாக கையளிக்கப்பட்டுள்ள முக்கியமான சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளமை குறித்து John Keells Properties (JKP) பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கையில் இது வரையில் தனி செயற்திட்டமொன்றால் கையளிக்கப்பட்டுள்ள அதிகூடிய எண்ணிக்கையிலான அடுக்குமனை தொகுதிகள் என்ற சிறப்பையும் அது பெற்றுள்ளது.
கொழும்பு 02 யூனியன் பிளேஸில் அமைந்துள்ள TRI-ZEN அடுக்குமனைச் செயற்திட்டமானது சௌகரியம், இலகுவான போக்குவரத்து வசதிகள், மற்றும் நீண்ட கால அடிப்படையில் மதிப்பு ஆகியவற்றை நாடுகின்ற வீட்டு உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட நவீன, திறன் முறை வாழ்வுக்கான குடியிருப்புத் தொகுதியாகும். ஒட்டுமொத்தமாக 897 திறன் அடுக்குமனைகளுடன், மூன்று கட்டடத் தொகுதிகளை இச்செயற்திட்டம் கொண்டுள்ளதுடன், இரு உடற்பயிற்சிக்கூடங்கள், பல நீச்சல் தடாகங்கள், ஒரு யோகா பயிற்சி மேடை, சிறுவர்கள் விளையாடும் இடம், மினி சினிமா, பல நிகழ்வு அறைகள், நடைப்பயிற்சித் திடல், உள்ளக சலவையக வசதிகள் மற்றும் பல உள்ளிட்ட பல்வகைப்பட்ட வாழ்க்கைமுறை வசதிகளை வழங்குகின்றது.
இது வரை 85% வரையான TRI-ZEN அடுக்குமனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையானது, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த திறன் அடுக்குமனைகளுக்கு பலத்த கேள்வி நிலவுவதை பிரதிபலிக்கின்றது. 700 அடுக்குமனைகள் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அரைவாசிக்கும் மேற்பட்டவற்றில் ஏற்கனவே வதிவாளர்கள் குடிபுகுந்துள்ளதுடன், இச்செயற்திட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மற்றும் மிகக் கவனமாக சிந்தித்து வடிவமைக்கப்பட்டுள்ள வாழ்வு அனுபவம் ஆகியவற்றின் பூரண நன்மையை வீட்டு உரிமையாளர்களும், குடியிருப்பாளர்களும் கொண்டுள்ளனர். வலுவான வாடகை வருமானத்திற்கான வாய்ப்புக்களையும் இச்செயற்திட்டம் வழங்குவதுடன், 2 படுக்கையறைகளைக் கொண்ட அடுக்குமனைகள் ஆண்டுக்கு 7% வரையான மொத்த வாடகை வருமானங்களை ஈட்டச் செய்கின்றன.
இன்னும் சொற்ப எண்ணிக்கையிலான அடுக்குமனைகள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், கவர்ச்சியான முதலீட்டுத் தெரிவை TRI-ZEN தொடர்ந்து வழங்கி வருகிறது. உடனடி வாடகை வருமானத்தை ஈட்டுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், ஏற்கனவே குடியிருப்பாளர்கள் வசிக்கின்ற அடுக்குமனைகளைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பும் கொள்வனவாளர்களுக்கு கிடைக்கின்றது. உள்நாட்டு மற்றும் உள்நாட்டில் வதியும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் மத்தியில் தொடர்ச்சியான கேள்வி நிலவி வரும் நிலையில், வளர்ச்சி கண்டு வருகின்ற ரியல் எஸ்டேட் முதலீட்டு மையம் என்ற கொழும்பின் ஸ்தானத்தை TRI-ZEN மேலும் வலுப்படுத்துகிறது.
“TRI-ZEN செயற்திட்டத்தில் 700வது அடுக்குமனையைக் கையளித்துள்ளமை எமக்கு மிகவும் பெருமையளிக்கும் ஒரு தருணமாகும். இந்த சாதனையானது ஒட்டுமொத்த அணியின் பிரதிபலிப்பு மற்றும் John Keells Properties மீது ஏற்பட்டு வருகின்ற அதிகரித்த நம்பிக்கை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது,” என்று John Keells Properties ன் துறைத் தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவருமான இனோக் பெரேரா அவர்கள் கருத்து வெளியிட்டார். “வலுவான வாடகை வருமானம் மற்றும் வசிப்பதற்கான அதிகரித்த கேள்வியும், கொழும்பின் வளர்ந்து வரும் குடியிருப்புச் சந்தையின் வலிமைக்கு சமிக்ஞையாகக் காணப்படுகின்றன,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
TRI-ZEN மற்றும் கிடைக்கப்பெறுகின்ற முதலீட்டு அடுக்குமனைகள் குறித்த மேலதிக விபரங்களை www.trizen.lk க்குச் செல்வதன் மூலமாகவோ அல்லது +94 702 294 294 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதனூடாகவோ அறிந்து கொள்ள முடியும்.

