Header Logo

பல்சுவை
தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

Jul 29, 2025 - 12:15 PM -

0

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

இந்தியாவின் ஒவ்வொரு ஆண்டும் கல்வியை முடித்து பல லட்சம் பேர் வேலை தேடி பல இடங்களுக்கு செல்கிறார்கள். எனவே வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தமிழக அரசு, அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இதனால் பல ஆயிரம் பேரின் அரசு வேலை கனவு நினைவாகிவருகிறது.

 

அடுத்ததாக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் பல இடங்களில் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதனால் வேலைக்காக சென்னை போன்ற பெரிய இடங்களுக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அதற்கு ஏற்ப தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.

 

அடுத்ததாக சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக பயிற்சிகளும் அளித்து வருகிறது. பேக்கரி தொழில், வீட்டு உபயோக பொருட்கள், யூடியூப்பில் வருமானம் ஈட்டுவது போன்ற பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு கடன் உதவிக்கான வழிகாட்டவும் செய்யப்படுகிறது.

 

மேலும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல விருப்பப்படுபவர்களுக்காக வழிகாட்டவும் செய்கிறது.

 

துபாய், சவூதி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் அறிவிக்கப்பட்டு எந்த வித இடைத்தரகர்கள் இல்லாமல் வேலைக்கான வழிகாட்டி வருகிறது.

 

இந்த நிலையில் செவிலியர் பணிக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் பணியாளர்கள் தேவை என்பதால் பல லட்சங்களில் ஊதியம் கொடுக்கப்படுகிறது. ஜெர்மனியில் மாதம் 3 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே தமிழகத்தை சேர்ந்த செவிலியர்களுக்கு வாய்ப்பு வழங்கிடும் வகையில் ஜெர்மனி மொழி பயிற்சி அளித்து வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

 

இது தொடர்பாக தமிழக அரசின் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில், செவிலியர்களுக்கு ஜெர்மன் கற்க அரிய வாய்ப்பதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது.

 

இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்ப கால மாத ஊதியமாக . 2,50,000/- முதல் . 3,00,000/-வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாமல் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டிய www.tahdco.com என்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!