Jul 29, 2025 - 03:17 PM -
0
SLT-MOBITEL 4G மற்றும் 5G சாதனங்கள் மற்றும் இணைப்புத்திறன் தயாரிப்புகளுக்கு நெகிழ்ச்சியான கொடுப்பனவு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக, முன்னணி Buy Now, Pay Later (BNPL) சேவை வழங்குனரான KOKO உடன் கைகோர்த்துள்ளது.
Buy Now Pay Later (BNPL) தீர்வை இணைத்து அறிமுகம் செய்துள்ள முதலாவது தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர் எனும் வகையில், SLT-MOBITEL வாடிக்கையாளர்களை மையப்படுத்திய புத்தாக்கமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் தொழிற்துறையின் முன்னோடி எனும் தனது நிலையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. வியாபித்துச் செல்லும் வாடிக்கையாளர் தெரிவுகளை நன்கு புரிந்து கொண்டு, சந்தை கேள்விகளுக்கேற்ப மாற்றமடைந்து, அனைத்து இலங்கையர்களுக்கும் செலுத்தும் பணத்துக்கு சிறந்த பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பை உறுதி செய்து, உயர் தரமான சேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதில் நிறுவனம் காண்பிக்கும் புரிதலை இந்தப் பங்காண்மை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சி SLT-MOBITEL இன் தேசிய டிஜிட்டல் உருமாற்ற இலக்குகளுடன் பொருந்துவதாக அமைந்திருப்பதுடன், நிதிக் கட்டுப்பாடுகள் அதிநவீன தொழில்நுட்பத்திற்கான அணுகலை மட்டுப்படுத்தாமலிருக்கும் என்பதை உறுதி செய்கிறது. மலிவு விலையில் மாதாந்த கொடுப்பனவுகள் மூலம் சாதனங்களை வழங்குவதனூடாக, இந்த கூட்டாண்மை மிகவும் இணைக்கப்பட்ட மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க பங்களிக்கிறது. 5G பின்பற்றலை துரிதப்படுத்துதல் மற்றும் இலங்கையில் உள்ள அனைவருக்கும் மலிவு விலையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குதல் என்ற SLT-MOBITEL இன் பரந்த நோக்கத்தையும் இந்த கைகோர்ப்பு ஆதரிக்கிறது.
மொபைல் தொழில்நுட்ப அணுகலுக்கான தடைகளை தகர்த்து, இந்த கூட்டாண்மை ஒரு முக்கியமான சந்தைத் தேவையை நிவர்த்தி செய்கிறது. இது வாடிக்கையாளர்கள் புதிய ஸ்மார்ட்போன்கள், மொபைல் ரவுட்டர்கள் மற்றும் இணைப்பு சாதனங்களை கொள்வனவு செய்து நிர்வகிக்கக்கூடிய தவணைத் திட்டங்கள் மூலம் இணைத்து அனுபவிக்க உதவுகிறது. டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு நெகிழ்வான கட்டணத் தீர்வுகள் பெருகிய முறையில் முக்கியத்துவம் பெற்று வருவதால், இந்த கூட்டாண்மை குறிப்பாக இளம் தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு பயனளிக்கும். அவர்கள் பிரீமியம் தொழில்நுட்பத்தைத் தேடுகின்ற போதிலும், பெருமளவான முன்பண முதலீடுகளை மேற்கொள்வதைவிட நெகிழ்வான கட்டணத் தெரிவுகளை விரும்புகிறார்கள். இது பல்வேறு பட்ஜெட்டுகளுக்கு ஏற்றது மற்றும் நிதி நெருக்கடி அற்றது.
'KOKO' இன் நெகிழ்ச்சியான கொடுப்பனவு கட்டமைப்புடன், வாடிக்கையாளர்களுக்கு தற்போது உயர் ரக சாதனங்களை மாதமொன்றுக்கு ரூ. 3,866 எனும் விலையிலிருந்து கொள்வனவு செய்யலாம். மூன்று மாதாந்த தவணைகளில் செலுத்த முடியும்.
ஸ்மார்ட்போன் தெரிவுகளில் Samsung Galaxy F16 5G 6+128GB, Samsung A06 4+64GB, Realme Note 60 4GB, 128GB, மற்றும் Redmi A5 4+128 போன்றன அடங்கியுள்ளன. உயர் வினைத்திறன் வாய்ந்த சாதனங்களில், HMD Crest 5G 6+128GB மற்றும் HONOR X5b 4GB+64GB போன்றன அடங்கியுள்ளன. இணைப்புத்திறன் தீர்வுகளில் 4G மொபைல் ரவுட்டர் மற்றும் 4G the Wingle போன்றன அடங்கியுள்ளன.
இந்த சாதனங்களை வாடிக்கையாளர்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட்களினூடாகவும், வங்கிக் கணக்குகளினூடாகவும் கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், KOKO’இன் மேம்படுத்தப்பட்ட கொடுப்பனவு கட்டமைப்புடன் இணைத்து, வாடிக்கையாளர்களின் ஏற்கனவே காணப்படும் நிதி உட்கட்டமைப்புகளில் வழங்கப்படும். உள்ளார்நத கணக்கு மேலாண்மை அமைப்பினூடாக, வாடிக்கையாளர்கள் பயனர் நட்பு இடைமுகம் மூலம் பணம் செலுத்துவதைக் கண்காணிக்கவும், தவணைகளை நிர்வகிக்கவும், அவர்களின் முன்னைய கொள்முதல் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் உதவுகிறது.
சகல SLT-MOBITEL விற்பனை நிலையங்கள், அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மற்றும் கம்பனியின் டிஜிட்டல் நாளிகைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கு KOKO தவணையில் இந்த சாதனங்களைக் கொள்வனவு செய்ய முடியும்.
KOKO இன் பிராந்திய பிரதம நிறைவேற்று அதிகாரி மைக்கல் சதாசிவம் மற்றும் மொபிடெல் பிரதம செயற்பாட்டு அதிகாரி சுதர்ஷன கீகனகே ஆகியோர் சக ஊழியர்கள் பிரசன்னத்தில் உடன்படிக்கையை பரிமாறிக் கொள்வதையும், (இடமிருந்து) மொபிடெல் தயாரிப்பு சந்தைப்படுத்தல் சிரேஷ்ட பொது முகாமையாளர் மற்றும் eChannelling PLC இன் பிரதம வணிக அதிகாரி இசுரு திசாநாயக்க, மொபிடெல் பிரதம சட்ட அதிகாரி நாமல் ரத்நாயக்க, SLT-MOBITEL விநியோக தொடர் முகாமைத்துவ பிரதம அதிகாரி ஜீவபத்ம சந்தகோமி மற்றும் SLT-MOBITEL பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க ஆகியோர் SLT-MOBITEL ஐ பிரதிநிதித்துவப்படுத்தியும், KOKO சார்பாக தலைமை அதிகாரி தினுகி கருணாதிலக, வணிக முகாமையாளர் தரணி சுமனசேகர, பிரதான கணக்கு முகாமையாளர் அஹமட் மொஹமட் அஸ்மத் மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி நிரோதன் சேகர் ஆகியோர் காணப்படுகின்றனர்.

