வடக்கு
காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க நகைகளை திருடிய யுவதி

Jul 29, 2025 - 04:29 PM -

0

காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க நகைகளை திருடிய யுவதி

தனது TikTok காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க உறவினர் வீட்டில் நகைகளை திருடிய யுவதி, காதலன் உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (28) மாலை கைது செய்துள்ளனர்.

 

புலம்பெயர் தேசத்தில் இருந்து விடுமுறையில் தாயகம் திரும்பிய குடும்ப பெண் தனக்கு உதவியாக நெருங்கிய உறவினரான குறித்த யுவதியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது உடமையில் இருந்த நகைகள் சிறிது சிறிதாக காணமல் போவதை உணர்ந்த பெண் குறித்த உறவினரான யுவதியை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

 

இந்த நிலையில் மீண்டும் ஒரு நாள் தனது உடமைகளை எடுப்பதற்காக திரும்பி குறித்த பெண்மணியின் வீட்டிற்கு வந்த யுவதியை நிற்குமாறு கூறிவிட்டு குளியளறைக்கு சென்று திரும்பி வந்து பார்க்கும் போது தனது தாலிக்கொடி காணமல் போயுள்ளதுடன்  குறித்த யுவதியும் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த நிலையில் கடத்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

 

முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் TikTok சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார்.

 

குறித்த இளைஞனுடன் TikTok மூலம் அறிமுகமாகி அவரை காதலித்து வந்த நிலையில் காதலனுக்கு, அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும், காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும் உறவினர் வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவெடுத்து, அதனை காதலனிடம் கொடுத்துள்ளதாக குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

 

வாக்கு மூலத்தின் அடிப்படையில், காதலனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

 

அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி, அவரது காதலன், காதலினின் மேலும் இரு காதலிகள் நகைகளை விற்க உதவியவர்கள் காதலனின் சித்தப்பா, சித்தி நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05