Jul 30, 2025 - 10:25 AM -
0
இந்த அரசாங்கத்திடம் இனங்களை ஒன்றிணைக்கும் எண்ணங்கள் இன்னும் உருவாகவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
அரசாங்கம் கொண்டு வர இருக்கின்ற புதிய அரசியல் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி தொடர்பில் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் முயற்சிகளை முன்னெடுத்து இருப்பதாக தெரியவில்லை. தமிழர்களுக்கான சமஷ்டி அரசியல் தீர்வானது எங்களுக்குரியது என தெரிவித்தார்.
--

