Jul 30, 2025 - 03:04 PM -
0
சபாநாயகர் நடுநிலையாக செயற்படுவதில்லை. அமைச்சர் பிமல் ரத்நாயக்க எங்களை தென்னிலங்கையில் இனவாதிகளாக காட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வாழைச்சேனையில் உள்ள இலங்கை போக்குவரத்துச்சபை சாலைக்கு இன்று (30) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது வாழைச்சேனை போக்குவரத்துச்சபைசாலைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இந்த விஜயத்தில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் இணைந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் நடாத்தியிருந்தார்.
--