உலகம்
நிலநடுக்கத்தால் குலுங்கிய வைத்தியசாலை... அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள்

Jul 31, 2025 - 06:22 AM -

0

நிலநடுக்கத்தால் குலுங்கிய வைத்தியசாலை... அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள்

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது கம்சட்கா பகுதியில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை அரங்கம் அதிர்ந்த போதிலும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

நிலநடுக்கம் ஏற்பட்டபோது வைத்தியசாலை கட்டடம் குலுங்கியது. அப்போது மருத்துவ ஊழியர்கள் அறுவை சிகிச்சை அரங்கில் உள்ள ஸ்ட்ரெச்சரை இறுக்கமாகப் பிடித்தனர். 

வைத்தியர்கள் பீதியடையாமல் அறுவை சிகிச்சையை முடித்தனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும், நோயாளி குணமடைந்து வருவதாகவும் ரஷ்ய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05