Jul 31, 2025 - 04:37 PM -
0
இந்த நாட்டினை பொறுப்பேற்றுள்ள அரசாங்கமும் அநுர குமார திசாநாயக்கவும் இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அதற்கான திட்டங்களையும் வகுத்து எதிர்காலத்தில் இளைஞர்களின் கைகளில் நாட்டினை வழங்குவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் ஒருங்கினைப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் இளைஞர்களை இணைப்போம் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டமானது முன்னால் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஜே.சஜிவ் தலைமையில் புனித செபஸ்த்தியார் ஆலய மண்டபத்தில் நேற்று (30) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து சிறப்பித்தார்.
2025, 2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் நிருவாக சபை உறுப்பினர்களுக்கான பொது வாக்கெடுப்பின் மூலம் புதிய தலைவராக லோஜிதன்தெரிவு செய்யப்பட்டார்.
இந்த உறுப்பினர்களினால் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான அபிவிருத்தி பணிகளையும் சமூக சேவைகளையும் மேற்கொள்ளவுள்ளர்.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், இளைஞர் அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர், மட்டக்களப்பு உதவி பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
இளைஞர்கள் உங்களது எதிர்காலம் இந்த நாட்டினுடைய எதிர்காலம் உங்கள் மீதுதான் தங்கி இருக்கின்றது விசேடமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாங்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு இருந்தோம் எங்களது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவிலே உருவாக்கப்பட்ட விடயம் இளைஞர்களை ஒன்றாக திரட்டி அவர்கள் மூலமாக இந்த நாட்டை அவர்களுக்கான ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்கின்ற தொழில் பொருளிலே எங்களது அரசியல் செயல்பாடுகள் நாட்டின் அரசாங்கத்தினுடைய செயல்பாடுகள் முன்வைத்ததான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம்.
அந்த வகையில் இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அதற்கான திட்டங்களையும் வகுத்துக் கொண்டிருக்கின்றோம் அதில் ஒரு கட்டமாக தான் இந்த யூத் கனக்ட் 2025 என்கின்ற செயல் திட்டத்தை கூறிக் கொள்ள முடியும்.
அதேபோன்று முக்கியமாக தொழில் சிறப்புமிக்க விடயங்கள் அல்லது உங்களது வாழ்வை விருத்தி செய்யக்கூடிய உங்களது எண்ணங்களை வளர்க்கக்கூடிய போன்ற விடயங்களை இதனோடு நாங்கள் இணைத்து இருக்கின்றோம்.
ஆகவே இந்த தெரிவின் பின்னர் தேசிய ரீதியாக ஒன்றிணைத்து இன்னும் ஒரு வேலை திட்டத்தினை செய்ய தயாராக இருக்கின்றோம். ஆகவே இந்த நாட்டின் முக்கியமானவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள் உங்கள் மூலமாகத்தான் இந்த நாட்டில் பல விடயங்கள் நடைபெற இருக்கின்றது. எதிர்காலம் உங்கள் ஊடாக சிறப்பாக இடம் பெறும் என எதிர்பார்க்கின்றோம்.
உங்களை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கம் என்கின்ற ரீதியில் எங்களுக்கு இருக்கின்றது. ஆகவே இது விடயத்தை நாங்கள் முன் கொண்டு நடத்துவதற்காக உங்களிடம் கையளிக்கின்றோம் என தெரிவித்தார்.
--