பல்சுவை
திருமண ஆசை காட்டி கவினை அழைத்த சுர்ஜித்!

Jul 31, 2025 - 05:04 PM -

0

திருமண ஆசை காட்டி கவினை அழைத்த சுர்ஜித்!

நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

 

கவினும் நானும் உயிருக்கு உயிராக காதலித்தோம். காதலிக்கிறாயா என எனது அப்பா கேட்டார். அப்போது இல்லை என கூறிவிட்டேன்.

 

செட்டிலாக 6 மாதம் டைம் வேண்டும் என கவின் தெரிவித்ததால் அப்பா கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன். அப்பாகிட்ட சுர்ஜித் இந்த தகவலை சொல்லிவிட்டான். அப்பா என்னிடம் கேட்டார்.

 

சகோதரர் சுர்ஜித்துக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் தந்தையிடம் கூறிவிட்டார், அவர் கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன்.

 

சுர்ஜித் கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வாருங்கள் என அழைத்தான். உங்கள் திருமணம் முடிந்தால்தான் எனது வாழ்க்கையை திட்டமிட முடியும் எனக்கூறி சுர்ஜித் அழைத்துள்ளான்.

 

கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வருமாறு சகோதரர் சுர்ஜித் கூறியது வீட்டிற்கு வந்து பேசும்போது தான் தெரிந்தது. அதன்பின்னர் கவினுக்கும் சுர்ஜித்தும் இடையில் என்ன விதமாக பேச்சுவார்த்தை நடந்தது எனத் தெரியவில்லை.

 

28 ஆம் திகதி மாலையில் தான் அவனை வரச்சொல்லி இருந்தேன். அதற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுவிட்டது. இஷ்டத்திற்கு யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05