Aug 1, 2025 - 09:59 AM -
0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் நேற்றைய தினம் (31) பெருந்தொகையான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பில் 54 பொதிகளில் அடங்கியிருந்த 103 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ள போதும், சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
--