Aug 1, 2025 - 01:09 PM -
0
1, 10, 19, 28 எண்ணில் பிறந்த உங்களுக்கு இந்த வாரம் அலைச்சல்கள் மிகுந்த வாரமாக இருக்கும். ஆகையால் உடல் நிலையில் அக்கறை தேவை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு இலாபம் கிட்டும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்தில் சில சுபச் செலவுகள் வந்துபோகும்.
இதனால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவியர்களிடையே ஒற்றுமை வலுப்பெறும். கலைத்துறையில் இருக்கும் நண்பர்களுக்கு வருமானங்கள் பெருகும்.
அரசியலில் இருக்கும் நண்பர்கள் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.கல்வியில் மாணாக்கள் நன்கு படிப்பார்கள்.
பரிகாரம்: அருகில் இருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வாருங்கள்.