Aug 1, 2025 - 02:16 PM -
0
மேஷம்
உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வேகமும், துடிப்பும் மிக்கவர்களாக இருப்பீர்கள். அதற்கு காரணம் செவ்வாய் பகவான். முருகப் பெருமான் வழிபாடு உங்களுக்கு அற்புதத்தை ஏற்படுத்தும். 3 ஆம் இடத்தில் குருவும், சுக்கிரனும் அமர்ந்திருக்கின்றனர். ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை மிதுனத்தில் சுக்கிர பகவான் இருக்கப் போகிறார். மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். முதியவர்களுக்கு ஏதாவதொரு மன வேதனை, வருத்தம் இருந்து கொண்டிருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு அற்புதமான மாதமாக இந்த மாதமாக இருக்கும். ராசியாதிபதியான சுக்கிர பகவான் தன ஸ்தானத்தில் தன காரகனோடு சேர்ந்திருக்கிறார். குரு, சுக்கிர யோகம் மிகப்பெரிய இலாபம், வாழ்க்கை முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, எதிர்காலத்தைப் பற்றிய கனவு போன்றவற்றை உருவாக்கித் தரும். சனி பகவான் இலாபத்தில் வக்கிரமாக அமர்ந்திருக்கிறது. இதனால் மிகப்பெரிய தொழிலைத் தொடங்கி வெற்றி காண்பீர்கள். பார்ட் டைம், கூடுதல் வருமானம் போன்ற எண்ணங்கள் தோன்றும்.
மிதுனம்
மிதுன ராசியில் குருவும், சுக்கிரனும் வந்து அமர்ந்துள்ளனர். ராசியில் குரு மட்டும் அமர்ந்திருந்தபோது குழப்பம், அசதியை கொடுத்திருப்பார். உங்களுக்கு இப்போது குரு, சுக்கிர யோகம் வரப்போகிறது. பணத்தை தரக்கூடிய சுக்கிரனும், குருவும் ராசியில் இருப்பதால் அபரிமிதமான பண வரவு உண்டாகும். செய்யக்கூடிய தொழிலில் திடீர் வளர்ச்சி உருவாகும். தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். திடீர் பண வரவுகள் ஏற்படும். விரையாதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். வெளிநாடு யோகம், இடமாற்றம், நிறுவன மாற்றம் உண்டாகும். மல்டிநேஷனல் நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
பணம் சம்பாதிப்பது தொடர்பான எண்ணங்கள் தோன்றும். பெரிய அளவில் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். வாழவே முடியாதோ என்ற பயம் ஏற்பட்டிருக்கும். இனி வாழ்க்கையில் கற்றுக்கொள்ளும் சூழல் உண்டாகும். எதிர்நீச்சல் போட்டுவரும் துணிவு ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ராசிக்கு அதிபதியானவர் சந்திர பகவான். உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பீர்கள். அன்பிற்கு அடிமையாகக் கூடிய நபர்களாக இருப்பீர்கள். கடக ராசியில் புதன் பகவான் அமர்ந்திருக்கிறார். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வரும் கவனமாக இருப்பது நல்லது. புதிய நபர்களுடனான வியாபாரத்தை இந்த மாதத்தில் தவிர்ப்பது நல்லது. எந்த விஷயத்தையும் தீர யோசித்துவிட்டு பிசினஸில் இறங்குவது நல்லது. இதுவரை பணம், தொழில், வியாபாரத்தில் பல்வேறு பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். இனிமேல் அந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். பிள்ளையாரை வணங்குவதால் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அடைவீர்கள்.
சூரிய பகவான் ஒகஸ்ட் 17 ஆம் திகதி 2ஆம் இடத்துக்கு வந்த பின்னர் உங்களுக்கு நிம்மதி உண்டாகும். பண வருமானம் விஷயங்களில் மாற்றம் வரும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் சிக்கல்களில் சிக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நீதி, நேர்மை என்று இருக்கும் ராசியினர். நிறைய சோதனைகளை சந்தித்து வருவீர்கள். அலுவலகத்தில் அதிக வேலை, பணிச் சுமைக்கு ஆளாகியிருப்பீர்கள். சிலருக்கு வேலையே பிரச்சனையாக இருக்கலாம். இந்த மாதம் உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் பல நன்மைகளை கொடுக்கப் போகிறார். சுக்கிரன் 9 ஆம் இடத்தில் அமர்கிறார். அங்கு குரு பகவானும் இருப்பதால் நன்மை உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் மாதமாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இதுவரை எல்லா விதமான காரியங்களிலும் இழுபறிகளைச் சந்தித்திருப்பீர்கள். இனி அந்த நிலைமை மாறும். தொழில் ரீதியாக இருந்த சிக்கல்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்ட விஷயங்களிலும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.