ஜோதிடம்
திடீர் பணவரவுகள் கிடைக்கவுள்ள ராசிக்காரரா நீங்கள்?

Aug 1, 2025 - 03:23 PM -

0

திடீர் பணவரவுகள் கிடைக்கவுள்ள ராசிக்காரரா நீங்கள்?

வேத ஜோதிடத்தில் பண வரவு, அதிர்ஷ்டத்தை குறிக்கும் ஒரு யோகமாக த்வி துவாதச யோகம் காணப்படுகிறது. சுமார் 84 வருடங்களுக்கு பின்னர் தற்போது இந்த த்வி துவாதச யோகத்தை சுக்கிர பகவான் உண்டாக்கவுள்ளார். இது மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான பலன்களை அளிக்க இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

26 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றி வரும் சுக்கிரன், நவகிரகங்களில் வலிமை மிக்க கிரகங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறார். அந்த வகையில் தற்போது புதன் ஆளும் ராசியான மிதுன ராசியில் குடியிருக்கும் சுக்கிரன், அங்கு ஏற்கனவே குடியிருக்கும் குரு பகவானுடன் இணைந்து மங்களகரமான கஜலட்சுமி யோகத்தை உண்டாக்குகிறார். 

இதனிடையே இன்று முதல் பண வரவை அதிகரிக்கும் த்வி துவாதச யோகத்தை உண்டாக்குகிறார். இந்த யோகத்தின் தாக்கம் மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசியினர் வாழ்க்கையிலும் எதிர்பாராத பண வரவை கொண்டு வருவதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

மிதுனம் 

த்வி துவாதச யோகத்தின் பலனாய் மிதுன ராசியினரின் படைப்பாற்றல் மேம்படும், தொழில் வாழ்க்கை சிறக்கும், குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கலைத்துறையில் பணியாற்றும் நபர்கள், தங்கள் துறையின் தலைவர்களாக வளரும் வாய்ப்பு காணப்படுகிறது. பணியிடத்தில் உங்கள் சிந்தனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உயர் பதவிகள் கிடைக்கும், ஊதிய உயர்வும் கிடைக்கும். 

சுயதொழில் செய்து வரும் நபர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வழிகளை கண்டறிவார்கள், பூர்வீக சொத்து வழியே இரண்டாவது வருமானம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. 

கன்னி 

த்வி துவாதச யோகத்தின் தாக்கம் கன்னி ராசியினரின் பணியிட பிரச்சனைகளை போக்க உதவி செய்கிறது. பணியிடத்தில் கடந்த சில தினங்களாக காணப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும், புதிய தொழில் தொடங்குவதில் காணப்பட்ட தடைகள் முடிவுக்கு வரும், விரைவில் உங்கள் செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

செல்வாக்கு மிக்க நபர்களின் உதவி உங்கள் தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை பெற்று தரும். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் என அனைவரும் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். அரசு பணிக்காக காத்திருக்கும் நபர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும், ஏற்கனவே பணியில் இருக்கும் நபர்கள் தங்கள் விருப்பம் போல் பணியிட மாற்றம் பெறும் வாய்ப்பும் காணப்படுகிறது. 

துலாம் 

த்வி துவாதச யோகத்தின் தாக்கம் துலாம் ராசியினரின் ஜாதகத்தில் 9-வது வீட்டில் மாற்றத்தை உண்டாக்குகிறது. உறவினர்களின் ஆதரவை பெற்று தரும் ஒரு மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த த்வி துவாதச யோகம் உங்கள் முன் முயற்சிகளுக்கு தேவையான உதவி மற்றும் ஆதரவை பெற்று தரும். குடும்ப உறவுகள் உங்கள் விருப்பங்களை மதிப்பார்கள், உங்கள் தொழில் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். 

பெற்றோர் வழியே போதுமான நிதி உதவி கிடைக்கும், நண்பர்களும் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு பண உதவி செய்வார்கள். பெரிய கடன் பிரச்சனைகள் இருக்காது, தொழில் தொடக்கத்திற்காக வங்கி கடன் பெற வேண்டி இருக்கும். தொழில் வழியே கிடைக்கும் போதுமான வருமானத்தை வைத்து இந்த கடனை விரைவில் முடிக்கலாம்; கவலை வேண்டாம். 

கும்பம் 

த்வி துவாதச யோகத்தின் தாக்கம் கும்ப ராசியினரின் மண வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருகிறது. கணவன் மனைவி இடையே காணப்பட்ட மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டு வருகிறது. குடும்ப பிரச்சனைகள் மறைவதோடு, உங்கள் தொழில் வாழ்க்கையில் காணப்படும் பிரச்சனைகளுக்கும் முடிவுகளை கொண்டு வர உங்கள் வாழ்க்கை துணை உதவி செய்வார். 

வாழ்க்கை துணையின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். உங்கள் செயல்திட்டங்களை சிறப்பாக செய்ய உத்வேகம் அளிக்கும். பணியிடத்தில் காணப்படும் சவால்களை தைரியமாக எதிர்கொள்வீர்கள், ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாய் முடியும். அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும், ஒப்பந்தங்கள் வழியே போதுமான வருமானமும் கிடைக்கும். 

சுயதொழில் செய்யும் நபர்கள் தங்கள் சேமிப்புகளை முறையாக கையாள்வது நல்லது. நிதி மேலாண்மையில் உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். தொழில் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் காணப்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் உங்கள் ஆரோக்கிய நிலையிலும் பிரதிபலிக்கும். வாழ்க்கை சிறப்பாக மாறும்!

Comments
0

MOST READ
01
02
03
04
05