Aug 2, 2025 - 12:20 PM -
0
வவுனியா, நெடுங்கேணி, தண்டுவான் பகுதியில் சட்டவிரோதமாக காட்டுப் பகுதியைத் துப்புரவு செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், மாங்குளம் வனவளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த 23 மற்றும் 40 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
--