உலகம்
டொனால்ட் ட்ரம்ப்புக்கான நோபல் பரிசு தொடர்பில் இந்தியா வௌியிட்ட தகவல்

Aug 2, 2025 - 12:37 PM -

0

டொனால்ட் ட்ரம்ப்புக்கான நோபல் பரிசு தொடர்பில் இந்தியா வௌியிட்ட தகவல்

உலகின் பல வலையங்களில் நாடுகளுக்கு இடையில் ஏற்படவிருந்த போர்களை நிறுத்தி அமைதி ஒப்பந்தங்களை எட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்திருந்தார். 

அவரது இரண்டாவது பதவி காலத்தில் 6 மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 6 போர்களை நிறுத்தியுள்ளார். 

இதனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் கரோலின் லீவிட் தெரிவித்திருந்தார். 

இது உலகளவில் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமா என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அவர், "இதை வெள்ளை மாளிகையிடம்தான் கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05