இந்தியா
த.வெ.க நிகழ்ச்சிகளில் விஜய் படத்தை மாத்திரமே பயன்படுத்த உத்தரவு

Aug 2, 2025 - 04:45 PM -

0

த.வெ.க நிகழ்ச்சிகளில் விஜய் படத்தை மாத்திரமே பயன்படுத்த உத்தரவு

தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சிகளில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என அதன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தனது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். 

இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெற உள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளை விஜய்யின் உத்தரவின் பேரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தீவிரமாக செய்து வருகிறார். 

இதனிடையே த.வெ.க. நிகழ்ச்சிகளிலும், பதாகைகளிலும் கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோரின் படங்களை த.வெ.க.வினர் பயன்படுத்தி வந்தனர். 

இந்த நிலையில் த.வெ.க. நிகழ்ச்சிகளில் தலைவர் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05