Header Logo

பல்சுவை
இன்ஸ்டாகிராம் காதலால் ஏற்பட்ட விபரீதம்

Aug 2, 2025 - 06:18 PM -

0

இன்ஸ்டாகிராம் காதலால் ஏற்பட்ட விபரீதம்

இந்தியாவின், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நாக அட்சயா சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நாக அட்சயாவுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் (22 வயது) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. 

அவர் நாக அட்சயாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். 

இதற்கு நாக அட்சயாவும் சம்மதம் தெரிவித்து உள்ளார். 

இதையடுத்து லிவின், தனியாக வசிக்க வீடு பார்ப்பதற்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். 

இதை நம்பிய நாக அட்சயா, காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையத்துக்கு வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் தங்க ஆபரணங்களை அவரிடம் கொடுத்துள்ளார். 

அதை பெற்றுக்கொண்டு கர்நாடகா திரும்பிய லிவின், தனக்கு பணம் போதவில்லை. எனவே மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என நாக அட்சயாவிடம் கேட்டுள்ளார். 

இதற்கிடையே லிவினின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார். 

பின்னர் லிவினிடம் மீண்டும் ராஜபாளையம் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். 

இந்த நிலையில் லிவினின் வருகைக்காக காத்திருந்த பொலிஸார் திட்டமிட்டபடி அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். 

மேலும் நாக அட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் தங்க ஆபரணங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!