சினிமா
கூலி படத்தின் டிரெய்லர் வௌியானது

Aug 2, 2025 - 07:08 PM -

0

 கூலி படத்தின் டிரெய்லர் வௌியானது

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'. 

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஓகஸ்ட் 14ஆம் திகதி வெளியாகிறது. 

கூலி' படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன. 

ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுவிழா தற்போது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்று வருகிறது. 

இந்நிலையில் கூலி படத்தின் டிரெய்லர் தற்போது வௌியாகியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05