Aug 3, 2025 - 11:47 AM -
0
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போன கிரான்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி, இன்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கனகராசா சரவணன் ஜயாத்துரை பத்மநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கூலித்தொழிலை மேற்கொண்டு வந்த குறித்த நபர், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வழக்கம்போல வேலைக்காக வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரது உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், குறித்த நபர் கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--