Aug 3, 2025 - 12:25 PM -
0
ரஷ்யாவின், கருங்கடல் பகுதிகளில் ஒன்றான சோச்சி அருகே ஒரு பெரிய எண்ணெய் கிடங்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு உக்ரைனிய ஆளிலில்லா விமான தாக்குதல் தான் காரணம் என்று ரஷ்ய அதிகாரிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
வெடிப்பினால் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சோச்சியின் அருகிலுள்ள விமான நிலையம் விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
உக்ரைனிய தாக்குதலால் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த 127 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய - கிராஸ்னோடர் பிராந்திய ஆளுநர் வெனியமின் கோண்ட்ராட்டேவ் (Veniamin Kondratyev) தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் காரணமாக உக்ரைனின் தெற்கு நகரமான மைக்கோலைவில், வீடுகளுக்கும், பொதுமக்களின் உட்கட்டமைப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.