Aug 3, 2025 - 03:08 PM -
0
ரஷ்யாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே குரில் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று காலை 11.07 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக பதிவானது.
குரில் தீவுகளில் 64 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.8 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
முன்னதாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பின்னர் அது நீக்கப்பட்டிருந்தது.
முன்னதாக கடந்த 31ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 6.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.