Aug 3, 2025 - 05:35 PM -
0
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடும் வீரர்களின் பெயர் பட்டியலை இன்று (3) அறிவித்துள்ளது.
இந்த போட்டித் தொடரில் ப்ளூ, கிரீன் மற்றும் கிரே ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கிரே அணியை இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் T20 அணித்தலைவர் சரித் அசலங்க வழிநடத்துவார்.
மேலும், இளம் வீரர் துனித் வெல்லலகே ப்ளூ அணியின் தலைவராகவும், கமிந்து மெண்டிஸ் கிரீன் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இறுதிப் போட்டி ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற உள்ளது.
அனைத்து போட்டிகளும் கொழும் SSC மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
ஆரம்பச் சுற்றில் ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெறும், மேலும் அதிகப் புள்ளிகளைப் பெறும் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கை அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இந்த தொடரை நடத்துவதற்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.