Aug 3, 2025 - 10:45 PM -
0
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4ஆவது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், கனடாவின் விக்டோரியா போகோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய விக்டோரியா 6-1,6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.