உலகம்
யேமனில் படகு விபத்து - 68இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

Aug 4, 2025 - 08:22 AM -

0

யேமனில் படகு விபத்து - 68இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 

இந்நிலையில், ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் இருந்து 154 பேர் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 

மத்திய தரைக்கடலில் யேமன் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த யேமன் கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 

இதில், 12 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் 68 அகதிகள் உயிரிழந்தனர். எஞ்சிய 74 பேர் கடலில் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, மாயமான 74 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05