சினிமா
லோகேஷ் பதிலால் ரஜினி ஷாக்!

Aug 4, 2025 - 10:43 AM -

0

லோகேஷ் பதிலால் ரஜினி ஷாக்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி திரையரங்கில் வெளியாகிறது.

 

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

 

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படம் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அதில், " ரஜினிகாந்த் சார் பழைய படங்களில் கையில் இருக்கும் பேட்ஜ் 777, 786 என இருக்கும். இந்த படத்தில் 5821 என கையில் பேட்ஜ் வைத்தேன். ஒருநாள் ரஜினிகாந்த் சார் என்னை அழைத்து கேட்டார்.

 

அது என்ன 5821? அது என்னுடைய அப்பாவின் கூலி எண். என்னுடய அப்பா கன்டெக்டர் என சொன்னேன். உங்க அப்பா கன்டெக்டர் என்பதை ஏன் சொல்லவில்லை என்று கேட்டு ஷாக் ஆகிவிட்டார். ஒருநாள் நீங்கள் கேட்பீர்கள் அது Memorable ஆக இருக்கும் என கூறினேன்" என்று தெரிவித்துள்ளார்.  

Comments
0

MOST READ
01
02
03
04
05