உலகம்
காசாவில் 56 மனிதாபிமான உதவி பணியாளர்கள் உயிரிழப்பு

Aug 4, 2025 - 12:28 PM -

0

காசாவில் 56 மனிதாபிமான உதவி பணியாளர்கள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேலிய படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 56 மனிதாபிமான உதவி பணியாளர்கள் உள்ளிட்ட 92 பேர் உயிரிழந்தனர். 

நேற்றைய தினம் மாத்திரம் பொதுமக்களுக்கான நிவாரண பொருட்களுடன் காசாவுக்குள் 36 லொறிகள் மாத்திரமே உட்பிரவேசித்துள்ளதாகவும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண பொருட்களுடனான லொறிகள் காசா எல்லைக்கு வௌியில் தரித்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அங்குள்ள அதிகளவான சிறுவர்கள் பட்டினியினால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

காசா மக்களுக்கு நாளொன்றுக்கு 500 முதல் 700 லொறிகளில் நிவாரணப் பொருட்கள் தேவைப்படுகின்ற நிலையில், குறைந்தளவான லொறிகளே உட்பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுவதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 

எனவே போரில் இஸ்ரேல் பட்டினையை ஆயுதமாக பயன்படுத்தி வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

Comments
0

MOST READ