Aug 4, 2025 - 01:18 PM -
0
படகுடன் மோதியதில் காயமடைந்த திமிங்கலம் ஒன்று உயிரிழந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தின் கடல் பகுதியில் நேற்று (2) இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் மீது வேகமாக வந்து கொண்டிருந்த திமிங்கலம் ஒன்று கடுமையாக மோதியது.
இதில் அந்த படகு ஆட்டம் கண்டதில் அதில் இருந்த சிலர் தடுமாறினர். படகின் பின் பகுதியில் உள்ள கூரான பொருட்கள் 20 அடி நீளம் கொண்ட திமிங்கலத்தின் முகத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்தின.
இதனால் துடித்துப் போன திமிங்கலம் கடல் பகுதியில் அங்குமிங்கும் ஓடியது. இதற்கிடையே படகில் இருந்த சிலர் கடலில் குதித்து தப்பிச் செல்வதற்கு முயன்றனர்.
தொடர்ந்து துடிதுடித்து சென்ற திமிங்கலம் கடற்கரைக்கு சற்று அருகே உயிரிழந்தது. அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக திமிங்கலம் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.