Aug 4, 2025 - 03:17 PM -
0
நியுஸிலாந்தில் பெண் ஒருவர் தமது பயணப் பொதியில் 2 வயதுடைய குழந்தையை கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு நகரமான கைவாகாவில் பெண் ஒருவர், பயணப் பொதி ஒன்றுடன் பஸ்ஸில் பயணித்துள்ளார்.
இதன்போது குறித்த பயணப் பொதி தனியாக நகர்ந்துள்ளது.
பின்னர் பயணப் பொதியை பஸ்ஸின் சாரதி சோதனையிட்ட போது, அதில் 2 வயதுடைய குழந்தை ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.
பொதியில் இருந்த குழந்தை அதிக உடல் வெப்பநிலையுடன் காணப்பட்ட நிலையில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், 27 வயதுடைய குறித்த பெண்ணை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கும், குறித்த பெண்ணிற்கும் உள்ள உறவுமுறை தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.
அது தொடர்பில் சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதுடன், அவருக்கு எதிராக கடத்தல், குழந்தையை மோசமாக நடத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.