Aug 4, 2025 - 03:19 PM -
0
ரசிகர்கள் அனைவரும் அடுத்ததாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. வருகிற ஆகஸ்ட் 14 ஆம் திகதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, அமீர் கான் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நேற்று (03) இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்தது. மேலும் பிரம்மாண்டமாக இசை வெளியிட்டு விழாவும் நடந்தது.
இந்த விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்களை ரஜினிகாந்த் மேடையில் பேசினார். இயக்குநர் லோகேஷை கூட கலாய்த்தார். இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் முதல் ஷாட் குறித்து மேடையில் கூறியுள்ளார் ரஜினி.
இதில், 'இந்த படத்துல First shot என்ன தெரியுமா? ஹீரோ dead bodyக்கு மாலை போடறது. யாராவது First shot இப்படி வைப்பாங்களா?" என பேசியுள்ளார்.
இவர் கூறுவதை பார்த்தால், இப்படத்தில் ஹீரோ ரஜினிகாந்த் கதாபாத்திரம் இறந்துவிடுவது போல் உள்ளதா என ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். ஆனால், அதில் கண்டிப்பாக லோகேஷ் ட்விஸ்ட் வைத்திருப்பார் என கூறப்படுகிறது.