சினிமா
ஷாருக்கான் சிறந்த நடிகரா? லெஃப்ட் ரைட் வெளுத்து வாங்கிய ஊர்வசி

Aug 4, 2025 - 04:11 PM -

0

ஷாருக்கான் சிறந்த நடிகரா?  லெஃப்ட் ரைட் வெளுத்து வாங்கிய ஊர்வசி

நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டதை விமர்சித்து நடிகை ஊர்வசி பேசி இருக்கிறார். 

71-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பில் ஜூரிக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார் நடிகை ஊர்வசி. 

ஷாருக்கானுக்கு எந்த அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது என்றும், விஜயராகவன் எப்படி துணை நடிகரானார் என்றும் ஊர்வசி கேள்வி எழுப்பினார். 

விஜயராகவனுக்கு சிறப்பு ஜூரி விருது கொடுத்திருக்கலாமே என்றும், அவரது சினிமா அனுபவத்தை ஜூரி ஆராய்ந்ததா என்றும் ஊர்வசி சரமாரியான கேள்விகளை எழுப்பி இருக்கிறார். 

அவர் பேசியதாவது : "விஜயராகவன் போன்ற ஒரு சிறந்த நடிகர். அவரும், ஷாருக்கானும் நானும் இருக்கிறோம். ஜூரி என்ன கணக்கில் எடுத்துக் கொண்டது? எந்த அடிப்படையில் வித்தியாசத்தைக் கண்டது? இவர் எப்படி துணை நடிகராகவும், அவர் எப்படி சிறந்த நடிகராகவும் ஆனார்? இதையெல்லாம் கேட்க வேண்டும். விஜயராகவனின் சினிமாவில் இத்தனை கால அனுபவம். மற்ற மொழிகளைப் போல பெரிய பட்ஜெட்டில் 250 நாட்கள் எடுக்கக்கூடிய படம் அல்ல அது. 

பூக்காலம் படத்தில் விஜயராகவனுக்கு ஜோடியாக நடிக்க இருந்தது நான். காலையில் மேக்கப் போட ஐந்து மணி நேரம், அதை நீக்க நான்கு மணி நேரம். நீங்கள் எவ்வளவு கோடி கொடுத்தாலும் என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவள் நான். அதையெல்லாம் தியாகம் செய்து விஜயராகவன் நடித்தார். அதற்கு ஒரு சிறப்பு ஜூரி விருது கொடுத்திருக்கலாமே? அது எப்படி துணை நடிகராக ஆனது? எதன் அடிப்படையில் எப்படி என்பதுதான் நான் கேட்பது. ஒரு நியாயம் இருக்கிறதல்லவா. 

விஜயராகவனின் நடிப்பின் அளவும், ஊர்வசியின் நடிப்பின் அளவுவும் இவ்வளவு குறைந்துவிட்டது என்று சொல்லட்டும். ஏன் சிறந்த நடிகை என்பதை பகிர்ந்து கொள்ளவில்லை. விஜயராகவனின் விருது ஏன் இப்படி ஆனது? ஏன் சிறப்பு ஜூரி விருது கூட இல்லை? அவரது அனுபவத்தைப் பற்றி ஜூரி விசாரித்ததா? இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் முன்பு வேறு ஏதேனும் நடிகர் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார்களா? அதையெல்லாம் சொன்னால் போதும்" என்று ஊர்வசி கூறினார்.

Comments
0

MOST READ