Header Logo

சினிமா
மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

Aug 4, 2025 - 05:22 PM -

0

மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுனை, கைது செய்து ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப் பிரிவு பொலிஸார் வழக்கு பதிவு செய்து, 2021 ஓகஸ்ட்டில் இருவரையும் கைது செய்தனர். 

பின், இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக, 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, தனிப்படையும் அமைக்கப்பட்டது. 

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமறைவாக இருந்து வந்த மீரா மிதுனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கில், பிடியாணையை நிறைவேற்றாத பொலிஸாரின் நடவடிக்கைக்கு, நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், டெல்லி நகர வீதிகளில் சுற்றி வரும் நடிகை மீரா மிதுனை மீட்கக் கோரி, அவரது தாய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, பொலிஸ் தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம், டெல்லியில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, டெல்லி பொலிஸாரால் பிடிக்கப்பட்ட மீரா மிதுன், அங்குள்ள அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டெல்லி காப்பகத்தில் உள்ள மீரா மிதுனை கைது செய்து ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஆஜர்படுத்தும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரை உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title