விளையாட்டு
அதிக விக்​கெட்டுக்களை வீழ்த்தி பும்ராவின் சாதனையை சமன் செய்த சிராஜ்

Aug 4, 2025 - 05:34 PM -

0

அதிக விக்​கெட்டுக்களை வீழ்த்தி பும்ராவின் சாதனையை சமன் செய்த சிராஜ்

இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் அதிக  விக்கெட்டுக்களை வீழ்த்தி ஜஸ்பிரிட் பும்ராவின் சாதனையை சமன் செய்துள்ளார். 

ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் மொஹமட் சிராஜ் மொத்தமாக 1113 பந்துகளை வீசியதுடன் 23  விக்​கெட்டுக்களையும் வீழ்த்தினார். 

இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக  விக்​கெட்டுக்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற ஜஸ்பிரிட் பும்ராவின் சாதனையை மொஹமட் சிராஜ் சமன் செய்துள்ளார். 

2021-2022 இல் இங்கிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா குறித்த சாதனையை பதிவு செய்திருந்தார். 

இதேவேளை, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். 

இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவின் வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் போது இந்திய அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 

அத்துடன் தற்போது நடைபெற்று முடிந்துள்ள இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளுமே, 5வது நாளில்தான் நிறைவடைந்திருந்தன. 

2000ஆம் ஆண்டிற்கு பின்னர் 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் 5 நாட்களும் நடைபெற்ற 4வது டெஸ்ட் தொடராக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ