வணிகம்
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய வர்த்தக சிறப்பு விருதுகளில் சியெட் களனி மீண்டும் ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டது

Aug 5, 2025 - 12:05 PM -

0

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய வர்த்தக சிறப்பு விருதுகளில் சியெட் களனி மீண்டும் ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டது

இலங்கையின் முன்னணி நியூமேடிக் டயர் உற்பத்தியாளரும், நாட்டின் அதிகம் விற்பனையாகும் டயர் வர்த்தக நாமமான சியெட்டை விநியோகிக்கும் நிறுவனமுமான சியெட் களனி ஹோல்டிங்ஸ் ஆனது, மீண்டும் ஒருமுறை வர்த்தகச் சிறப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க தேசிய வர்த்தகச் சிறப்பு விருதுகள் (NBEA) 2025 இல் 'உற்பத்தி - பிற துறை' பிரிவில் கூட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்த வருமானம் ரூ.10 பில்லியனுக்கும் அதிகமாக உள்ள நிறுவனங்களுக்கான அதிபெரிய அளவு பிரிவில் போட்டிட்ட சியெட் களனி நிறுவனமானது இந்த ஆண்டுப் போட்டியில் செயல்திறனுடன், இலங்கையின் மிகவும் தொழில்முறை ரீதியாகவும் திறமையாகவும் முகாமைத்துவம் செய்யப்படும் வர்த்தகங்களில் ஒன்றாக அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது. 

விருதுகளுக்கான மதிப்பீட்டு அளவுகோல்கள் ஏழு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது: மூலோபாயம் மற்றும் தலைமைத்துவம், பெருநிறுவன நிர்வாகம், திறன் மேம்பாடு, செயல்திறன் முகாமைத்துவம், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தை அணுகல், CSR சமூகப்பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைபெறுதகுதன்மை மற்றும் வர்த்தகம் மற்றும் நிதியியல் பெறுபேறுகள் ஆகியவையே அவையாகும். 

சியெட்டின் சமர்ப்பிப்பானது தொடர்ச்சியான முன்னேற்றத்தின் கலாசாரத்தை வளர்க்கும் மொத்த தர முகாமைத்துவ (TQM) கட்டமைப்பின் ஒருங்கிணைந்த தர அடிப்படையிலான முகாமைத்துவ (QBM) முறைமையை எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் நிறுவனத்தின் QBM தத்துவமானது ஒவ்வொரு ஊழியரும் வர்த்தக இலக்குகளை அடைவதற்கும் உயர்ந்த பெறுமதியை வழங்குவதற்கும் பங்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வாடிக்கையாளர் கவனம், மக்கள் கவனம் மற்றும் செயல்முறை கவனம் ஆகியவற்றைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டுக்கான NBEA விருது நிகழ்வில் சியெட் பெற்ற வலுவான செயல்திறன், அதன் முந்தைய வெற்றிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் 2010, 2011, 2012, 2013 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பிரிவு வெற்றிகளும் அடங்கும், முந்தைய ஆண்டுகளில் நிறுவனமானது உற்பத்தி - பிற துறை மற்றும் உள்நாட்டு சந்தை அணுகல் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகளை பெற்றது. 

இந்த சமீபத்திய விருதுகள் சியெட்டின் வளர்ந்து வரும் கௌரவப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் இதில் LMD-யால் 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் 'மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தகநாமம்' என்று நாமமிடப்பட்டமை மற்றும் இலங்கையின் பட்டய தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனத்தினால் (CPM) தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக டயர் பிரிவில் சிறந்த முகாமைத்துவம் கொண்ட நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை ஆகியவை அடங்கும். 

இலங்கையில் நியூமேடிக் டயர்களை உற்பத்தி செய்யும் மிகப்பாரிய நிறுவனமான சியெட் களனி ஹோல்டிங்ஸ், நாட்டின் மொத்த தேவையில் கிட்டத்தட்ட பாதியை உற்பத்தி செய்வதுடன் மற்றும் இறக்குமதியை நம்பியிருப்பதை கணிசமான அளவில் குறைக்கிறது. நிறுவனமானது தனது உற்பத்தியில் சுமார் 20% ஐ 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அத்துடன் மேலும் 11 வர்த்தகநாமங்களில் 30 க்கும் மேற்பட்ட வாகன மாதிரிகளுக்கு அசல் உபகரணங்களாக உள்நாட்டு வாகன உதிரிப்பாகங்கள் பொருத்துதல் துறைக்கு ஆண்டுதோறும் 150,000 க்கும் மேற்பட்ட டயர்களை வழங்குகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05