Aug 5, 2025 - 12:29 PM -
0
இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வர்த்தகச் சிறப்பு விருதுகள் (NBEA) 2025 நிகழ்வில், SLT-MOBITEL கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது. இந்நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது.
நிறுவனத்தின் நிலைபேறான வியாபார செயற்பாடுகளை அணுகல் மற்றும் கூட்டாண்மை பொறுப்புச் செயற்பாடுகள் போன்றவற்றை கௌரவித்து ESG இல் சிறப்புக்கான மெரிட் விருது SLT- MOBITEL க்கு வழங்கப்பட்டிருந்தது. சூழல் அக்கறை, சமூகத் தாக்க செயற்பாடுகள் மற்றும் சிறப்புக்கான ஆளுகை போன்றவற்றை கவனத்தில் கொண்ட SLT-MOBITEL இன் ESG செயற்பாடுகளுக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன், நிறுவனத்தின் செயற்பாடுகளில் இவை ஒன்றிணைந்துள்ளன.
மேலும், உட்கட்டமைப்புகள் மற்றும் பயன்பாடுகள் பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்பு விருத்தி மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகள் போன்றவற்றில் நிறுவனம் காண்பிக்கும் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த கௌரவிப்பு அமைந்திருந்தது.
இந்த இரட்டை கௌரவிப்புகளினூடாக, நிலைபேறான வியாபார செயற்பாடுகளில் SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், பிரதான தொலைத்தொடர்பாடல் சேவைகளில் சிறப்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. உட்கட்டமைப்பு முன்னோடி மற்றும் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில், டிஜிட்டல் இணைப்புத் திறனை கட்டியெழுப்புவதில் காண்பிக்கும் பங்களிப்பு, சூழல்சார் முன்மாதிரியாக திகழ்கின்றமை மற்றும் சமூகத் தாக்க செயற்பாடுகள் போன்ற நிறுவனத்தின் செயற்பாடுகள் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
20 ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வியாபாரச் சிறப்பு விருதுகள், இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது. தேசத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கி, சிறப்பின் சர்வதேச நியமங்களை பூர்த்தி செய்திருந்த நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.

