Aug 5, 2025 - 12:34 PM -
0
இலங்கையின் ஒவ்வொரு இல்லத்துக்கும் எளிமைப்படுத்தப்பட்ட தெரிவுகளுடன் அதிகம் பெறுமதியை பெற்றுக் கொடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட Home 4G LTE Broadband தெரிவை SLT-MOBITEL அறிமுகம் செய்துள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு இல்லத்துக்கும் மதிநுட்பமான, சகாயமான தெரிவை வழங்கும் வகையில் இந்த மீளறிமுகம் அமைந்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள SLT- MOBITEL HOME 4G LTE பக்கேஜ்கள் எளிமையானவையாகவும், பெறுமதி சேர்ந்தனவாகவும் அமைந்துள்ளதுடன், டேட்டா அளவு, வேகம், பட்ஜெட் அல்லது வாழ்க்கைமுறை போன்ற வாடிக்கையாளர்களின் முழு எதிர்பார்ப்புகளையும் நிவர்த்தி செய்வதாக உள்ளன.
கவர்ச்சிகரமான புதிய இணைப்பு கட்டணங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட டேட்டா ஒதுக்கீடுகளுடன், இந்த ப்ளான்கள் அதிக தரம் வாய்ந்த புரோட்பான்டை இலகுவாக அணுகச் செய்யக்கூடியனவாக அமைந்துள்ளன. மூலோபாய ரீதியில் மாற்றியமைக்கப்பட்ட SLT- MOBITEL இந்த புதிய தெரிவுகளினூடாக, புத்தாக்கத்துக்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டின் இல்லங்களுக்கு வலுவூட்டுவதுடன், நெகிழ்ச்சியான, எதிர்காலத்துக்கு தயாரான மற்றும் தங்கியிருக்கத் தக்க இணைப்புத் திறனை வழங்குவதாக அமைந்துள்ளது.
புதிய SLT-MOBITEL HOME 4G தெரிவுகள், தெரிவு செயன்முறையை ஒழுங்குபடுத்துவதுடன், முன்னர் காணப்பட்ட 28 பிற்கொடுப்பனவு பக்கேஜ்களை கவனமாக தெரிவு செய்யப்பட்ட 10 தெரிவுகளாக மாற்றியமைத்துள்ளது. இந்த எளிமைப்படுத்தலினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான பக்கேஜ்களை தெரிவு செய்து கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், செலுத்தும் பணத்துக்கு உயர் பெறுமதியை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளன.
புதுப்பிக்கப்பட்ட தெரிவுகளில் உள்ள ஒவ்வொரு புதிய பக்கேஜும் போட்டிகரமான விலையில் மேம்படுத்தப்பட்ட டேட்டா ஒதுக்கீட்டைத் வழங்குவதுடன், சேவை தரத்தில் ஒப்பற்ற வகையில் உயர்ந்த மதிப்பை வழங்குகின்றன. விரிவான முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில், தேர்வு மற்றும் கட்டண விருப்பங்களில் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்கிறது.
50GB முதல் தாராளமான 400GB மாதாந்த டேட்டா வரை பரந்த அளவிலான டேட்டா கொடுப்பனவுகள் மூலம் ஒவ்வொரு வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட பிற்கொடுப்பனவு எனிடைம் பேக்கேஜ்கள், அதிக ஸ்ட்ரீமிங் பிரியர்கள் மற்றும் கேமர்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. இதன் விலை ரூ. 1,290 இல் ஆரம்பிக்கிறது. அனைத்து பிற்கொடுப்பனவு அளவு அடிப்படையிலான பேக்கேஜ்களிலும் ஒரு தனித்துவமான அம்சமாக, பிரபலமான இலவச இரவுநேர டேட்டா அடங்கியுள்ளது. இது நள்ளிரவு முதல் காலை 7 மணி வரை வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு off-peak நேரங்களில் தமது பயன்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
பணிபுரியும் நிபுணர்களுக்கு, 100-200GB பேக்கேஜ்கள் video conferencing, cloud storage மற்றும் தொலைதூர வேலை தேவைகளை நிவர்த்தி செய்ய உதவுவதுடன், பட்ஜெட் செயல்திறனையும் சிறப்பாக ஆதரிக்கின்றன. SLT-MOBITEL இரண்டு புதிய முற்கொடுப்பனவு பக்கேஜ்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள், அடிப்படை ஸ்ட்ரீமிங் மற்றும் ஒன்லைன் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உள்ளடக்கிய 30 நாட்களுக்கு 35GB மற்றும் 75GB டேட்டா ஒதுக்கீடுகளை வழங்குகிறது. மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விகிதங்கள் முற்கொடுப்பனவு மாதிரியை விரும்புவோருக்கு நெகிழ்வான விருப்பங்களை நிவர்த்தி செய்ய உதவுகிறது. SLT-MOBITEL HOME 4G பக்கேஜ்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.sltmobitel.lk ஐ பார்வையிடவும்.
மதிப்பை மேம்படுத்தும் வகையில், SLT-MOBITEL 4G LTE வழியாக PEOTV ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இது அதிவேக வயர்லெஸ் இணைப்பு மற்றும் தொந்தரவு இல்லாத சுய-நிறுவல் மூலம் மேம்பட்ட வசதி மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை வழங்கும். இந்த முயற்சி புதிய மற்றும் ஏற்கனவே உள்ள 4G LTE இரட்டை-பிளே பிராட்பேண்ட் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது, வயர்லெஸ் நெகிழ்வுத்தன்மையுடன் பல்வேறு இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் தேவைக்கேற்ப பொழுதுபோக்குகளை வழங்குகிறது. இந்த சேவை நேரடி விளையாட்டு, விருப்பமான நிகழ்ச்சிகள், தேவைக்கேற்ப திரைப்படங்கள் மற்றும் பிரீமியம் உள்ளடக்கத்திற்கான தடையற்ற அணுகலை வழங்குவதுடன், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் வசதியை இணைக்கிறது.
SLT-MOBITEL இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “SLT-MOBITEL இன் Home 4G LTE Broadband பிரிவு மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதனூடாக, அதிகரித்துச் செல்லும் எமது வாடிக்கையாளர்களின் தேவைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் தர புரோட்பான்ட் இணைய சேவைகள் வழங்குனர் எனும் வகையில், தொடர்ச்சியாக புத்தாக்கத்தை மேம்படுத்துவது மற்றும் எமது சேவை விநியோகங்களை உறுதியளித்தல் போன்றவற்றினூடாக ஒப்பற்ற பெறுமதி மற்றும் சௌகரியத்தை பெற்றுக் கொடுப்பதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இந்த புதிய HOME 4G All Set in Every Way பக்கேஜ்கள், ஒவ்வொரு வேகத் தேவை, கையிலுள்ள தொகை, பாவனை மற்றும் வாழ்க்கைமுறை போன்றவற்றுக்கு பொருந்தும் வகையில் இணைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை உறுதி செய்து வழங்கப்படுகின்றது.” என்றார்.
புதிய பக்கேஜ்கள் புதிய இணைப்புகளுக்கு உடனடியாக பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் கிடைப்பதுடன், ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்கள் மேம்படுத்தப்பட்ட உள்ளம்சங்களைக் கொண்ட இந்த பக்கேஜ்களிலிருந்து தமக்கான தெரிவுகளை மேற்கொள்ள முடியும். வாடிக்கையாளர் ஹொட்லைன் இலக்கமான 1212 உடன் தொடர்பு கொண்டு அல்லது நாடு முழுவதிலும் காணப்படும் எந்தவொரு SLT-MOBITEL விற்பனை நிலையத்துக்கும் விஜயம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.